கடந்த 3 ஆண்டுகளில் 1200 வழக்குகளில் முடிவு எடுக்காததால், தமிழக அரசுக்கு ரூ.33 கோடி இழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லஞ்சம் ஊழலில் சிக்கிய அரசு ஊழியர்கள் குறித்த புகார்களை விரைந்து விசாரித்து முடிவு எடுக்காததால், தமிழக அரசுக்கு 33 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சட்டப்பஞ்சாயத்து இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் லஞ்சம் மற்றும் ஊழலில் லஞ்ச ஒழிப்பு துறையால் பிடிபடுவது மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளில் சிக்குபவர்களை அரசு பணியிடை நீக்கம் செய்கிறது. குற்றச்சாட்டு குறித்த விசாரணை காலக்கட்டத்தின் போது, பிழைப்பூதியமாக முதல் 6 மாதத்திற்கு 50 சதவீத ஊதியமும், 6 மாதத்திற்கு பின், 75 சதவீத ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. 

இதுதொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில், செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பஞ்சாயத்து இயக்க தலைவர் சிவ இளங்கோ, RTI மூலம் பெறப்பட்ட தகவலில் கடந்த 3 ஆண்டுகளில் லஞ்சம் மற்றும் ஊழலில் சிக்கிய ஆயிரத்து 200 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களுக்கு இதுவரை 33 கோடி ரூபாய் வரை பிழைப்பூதியமாக வழங்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்ட அவர், இதுபோன்ற வழக்குகளை உடனடியாக விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்களின் வரிப்பணம் விரையமாவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.   

Night
Day