கள்ளக்‍குறிச்சி: மஞ்சு விரட்டு போட்டி - ஏராளமானோர் கண்டு ரசித்தனர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதனை ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொது தேர் இழுக்கும் பிரச்சனையில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு 100 காளைகள் பங்கேற்ற மஞ்சு விரட்டு மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகளை இளைஞர்கள் அடக்கி மகிழ்ந்தனர்.

varient
Night
Day