புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு போட்டி - காளைகளை அடக்க முயற்சித்து வரும் மாடுபிடி வீரர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடமலாப்பூர், ராஜா வயல், குருக்கலையாபட்டி உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துகின்றனர். இதில், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்க வீரர்கள் முயற்சித்து வருகின்றனர். போட்டியில், வெற்றி பெற்ற காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளிக்காசு, சில்வர் அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கி வருகின்றனர். 

varient
Night
Day