கோவை பாலியல் வன்கொடுமைக்காக ஆட்சியாளர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்' - பாமக தலைவர் அன்புமணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி குறிப்பிட்டுள்ளார். 

மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் குற்றவாளிகளை கைது செய்ததையும், குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்ய ஆணையிட்டிருப்பதையும் சாதனையாகக் கூறி தனது தோல்வியை மூடி மறைக்க முதலமைச்சர் முயல்வது கண்டிக்கத்தக்கது என்றும் அன்புமணி சாடியுள்ளார். ஆட்சிக் காலத்தின் கடைசி சில மாதங்களிலாவது தமிழகத்தில் போதைப் பொருள்களை ஒழிக்கவும், பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

Night
Day