சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 300 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 109 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தங்கம் வாங்க திட்டமிட்டுள்ள மக்கள், விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Night
Day