சென்னை காசிமேட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அதிரடி ஆய்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை காசிமேட்டில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை மீன் பிடி தடைகாலத்தில் மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளில் உள்ள பழுதுகளை சரிசெய்வது வழக்கம். இந்நிலையில் இன்னும் இரண்டு வார காலத்தில் தடைகாலம் முடிவடைய உள்ள நிலையில், விசைப்படகுகளில் பொருத்தப்பட்டிருக்கும் இன்ஜீன்கள் சரியான வேக அளவில் உள்ளதா? தகவல் தொழில்நுட்ப கருவிகள் செயல்படுகிறதா? உயிர் காக்கும் கருவிகள் போதுமான அளவில் உள்ளதா? என மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நல்ல நிலையில் உள்ள விசைப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படும் என்றும் அவ்வாறு இல்லாத படகுகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

Night
Day