டாஸ்மாக் கடை பார் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு - "சைட் டிஷ்"-க்கு பணம் கேட்டதால் ஆத்திரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த மாம்பாக்கத்தில் மது அருந்தியதற்கு பணம் கேட்ட டாஸ்மாக் ஊழியர்களை ரவுடிகள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மாம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்திய ரவுடிகள் சிலர், மதுபானம் மற்றும் சைடிஷ் வாங்கி சாப்பிட்ட நிலையில், அதற்கு பணம் கேட்டபோது ஆத்திரத்தில் பாரை அடித்து நொறுக்கினர். அதனைத்தொடர்ந்து பட்டாக்கத்தியால், டாஸ்மாக் பாரில் பணியாற்றும் ஊழியர்களை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிய நிலையில், இதில் படுகாயம் அடைந்த வட மாநில தொழிலாளர்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்களாகியும், குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர். இந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 

Night
Day