தங்கம் விலை ரூ.60,000-த்தை தாண்டியது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து வரலாற்றில் முதன்முறையாக 60 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், நகைபிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி மாற்றம் ஏற்படும் தங்கம் விலை, தற்போது 60 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து 60 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராம் ஒன்றுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 7ஆயிரத்து 525 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்டாலும் ஒரு சவரன் 60 ஆயிரத்தை கடந்து விற்பனையாவது நகை பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி, ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day