திருப்பூர்: அமைச்சர் கயல்விழி வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி அமைச்சர் கயல்விழி வீட்டை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணைக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் வழங்கக் கோரி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்றிரவு பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் கயல்விழி வீட்டை முற்றுகையிட்டு வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கோரிக்கை குறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

varient
Night
Day