தூத்துக்குடி: சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் இரவு நேரத்தில் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி நிர்வாகம் பிடித்து நடவடிக்‍கை எடுக்‍க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் எட்டையாபுரம் சாலை, திருச்செந்தூர் சாலை, வ உ சி சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இரவு நேரத்தில் சாலையில்  மாடுகள் குறுக்‍கே செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திக்‍கும் நிலை உருவாகியுள்ளதாக பொதுமக்‍கள் தெரிவித்தனர்.

Night
Day