பழனி அருகே சூறாவளி காற்றுடன் கனமழை : வேரோடு சாய்ந்த தென்னை மரங்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நேற்றிரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 200-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தது. கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை, மா, வாழை, பனை உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு சூறைகாற்றுடன் பெய்த கனமழையால் 200-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. மேலும் பனை மற்றும் மா மரங்களும் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதற்கு அரசு உரிய இழப்பீடு தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day