லாரி கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே எம் சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வட மாநில தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 

கருர் மாவட்டம் தென்னிலை, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகளில் இருந்து எம்.சாண்டுகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னிலை அருகே உள்ள தனியார் கல்குவாரியில் இருந்து கட்டுமான தேவைக்காக எம்.சாண்ட் லோடு ஏற்றி சென்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் மேலே அமர்ந்திருந்த 3 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது எம்.சாண்ட் மணல் குவியலில் சிக்கி வட மாநில தொழிலாளர்கள் மூன்று பேரும் மூச்சு திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மட்டும் நல்வாய்ப்பாக காயங்களுடன் உயிர்பிழைத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day