வரத்து அதிகரிப்பால் சுரைக்காய் விலை வீழ்ச்சி- விவசாயி சோகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சுரைக்காய் விலை வீழ்ச்சியால்  தோட்டத்திலேயே சுரைக்காய்களை வெட்டி வீசிய விவசாயி ஒருவரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுரக்காய்க்கு தனி மகத்துவம் என்பதால் விவசாயிகள் அதிக அளவில் சுரைக்காய் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் வரத்து அதிகரிப்பால் சுரைக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, கடந்த மாதம் ஒரு கிலோ சுரைக்காய் 30 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது மிகவும் விலை குறைந்து விற்பனையாவதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் விளைந்த சுரைக்காய்களை அரிவாளால் வெட்டி வீசிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day