விபத்தில் தொழிலதிபர் பலி - பேருந்தை நொறுக்கிய உறவினர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 தஞ்சாவூர் அருகே தனியார் பேருந்து மோதி தொழிலதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால்  ஆத்திரம் அடைந்த உறவினர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் தென்னமநாடு கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் கதிர்வேல் என்பவர்  இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்து, இருசக்கர வாகத்தின் மீது மோதி விபத்துகுள்ளானதில் கதிர்வேல்  சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். இதை அறிந்த அவரின் உறவினர்கள் ஆத்திரத்தில் பேருந்தின் கண்ணாடிகளை கட்டை மற்றும் கற்களால் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். பின் சடலத்தை எடுக்கவிடாமல் சாலை மறியலில் ஈடுபட்டதால் பட்டுக்கோட்டை சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்த தொழிலதிபர் கதிர்வேலின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறாய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுள்ளனர். இதனால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day