14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 14 மாவட்டகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக உள் பகுதிகளின் நிலவும் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதே போல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Night
Day