டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தார் பெலாரஸின் சபலென்கா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டென்னிஸ் தரவரிசை பட்டியலில் பெலாரஸின் சபலென்கா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க ஓபன், வுஹான் ஓபன் ஆகிய போட்டிகளில் மகுடம் சூடிய சபலென்கா சீன ஓபனில் அரையிறுதி வரை முன்னேறி இருந்தார். இந்நிலையில், டென்னிஸ் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன், ஒற்றையர் தரவரிசையில் இவர் 9 ஆயிரத்து 706 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும், கடந்த ஓராண்டாக முதலிடத்தில் இருந்த போலந்தின் இகா ஸ்வியாடெக் 9 ஆயிரத்து 665 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 

Night
Day