விளையாட்டு
சிறிது நேரத்தில் புறப்பட்ட மெஸ்ஸி... மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்......
கொல்கத்தாவில் உள்ள மைதானத்தில் இருந்து கால்பந்து வீரர் மெஸ்ஸி சென்றதும் ...
இந்திய அணி இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் ஒலிம்பிக் 3x3 கூடைப்பந்து போட்டியில் விளையாட வேண்டும் என்பதே லட்சியம் என்று இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னை அருகே உத்தண்டியில் நடைபெற்ற இந்திய கூடைப்பந்து சம்மேளன வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில், அதன் தலைவர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் செங்கல்வராய நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, கிரிக்கெட், கால்பந்து, கபடி போல கூடைப்பந்து விளையாட்டிலும் லீக் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆண்களுக்கான லீக் போட்டிகள் போல பெண்களுக்கான லீக் போட்டிகளையும், சீனியர், ஜூனியர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
கொல்கத்தாவில் உள்ள மைதானத்தில் இருந்து கால்பந்து வீரர் மெஸ்ஸி சென்றதும் ...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...