உத்தரப்பிரதேசம் சம்பல் மாவட்டத்தில் கல்கிக்கு கோவில் : பூமி பூஜை விழாவில் பங்கேற்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஸ்ரீ கல்கி தாம் கோயிலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். 

கடவுள் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக கருதப்படும் கல்கி அவதாரத்தை மையமாக கொண்டு, உலகின் முதல் கல்கி கோயிலாக இந்த ஆலயம் கட்டப்படுகிறது. கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பின் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா தற்போது பாரம்பரியத்துடன் கூடிய வளர்ச்சி என்ற மந்திரத்துடன் வேகமாக முன்னேறி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். ஸ்ரீ கல்கி தாம் கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்களித்தது ஒரு பாக்கியம் எனவும், அதற்காக ஸ்ரீ கல்கி தாம் நிர்மான் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

Night
Day