சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.46,400-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 46 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், சவரன் 46 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 77 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 77 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day