கோவை மருதமலை - வெள்ளி வேல் திருடிய போலி சாமியார் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை அடுத்த மருதமலையில், தனியார் மடத்தில் இருந்து வெள்ளி வேலை திருடிய போலிச் சாமியாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கோவை மருதமலையில் சுப்பிரமணிசாமி கோவில் அடிவாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தியான மண்டபத்தில், மூலவருக்கு முன்பாக சுமார் இரண்டரை அடி உயரத்தில் 4 லட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் வைக்கப்பட்டிருந்தது.  இந்த வெள்ளி வேல் கடந்த 2-ஆம் தேதி திருடுபோன நிலையில், சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் வெள்ளிவேலை திருடிச் சென்ற நபரை தேடி வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமுகை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் சர்மா என்பவர் காவி உடை அணிந்து வெள்ளி வேலை திருடிச் சென்றது தெரிந்தது. இதையடுத்து போலிச் சாமியார் வெங்கடேச சர்மாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த வெள்ளி வேலை பறிமுதல் செய்தனர். மேலும் வெங்கடேச சர்மா அவ்வப்போது பல்வேறு கோயில்களுக்கு செல்லும்போது இது போன்று ஆளரவமற்ற இடங்களில் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்ட வெங்கடேச சர்மாவை கோவை அழைத்து வந்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day