சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 
பங்குனி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மலையாள மாத பிறப்பை முன்னிட்டு நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், பங்குனி உத்திர திருவிழா வரும் 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதனையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day