சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போலி நெய் தீபம் விற்கவும், கற்பூரம் ஏற்றவும் தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் மே 11-ம் தேதி சித்ரா பௌர்ணமி நடைபெற உள்ளது. அன்று இரவு 8:47 மணிக்கு தொடங்கி மறுநாள் இரவு 10:43 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமென கூறப்படுகிறது. இந்நிலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலையோர கடைகளில் போலி நெய் தீபம் விற்கக் கூடாது என்றும்,  கற்பூரம் விற்கவும், ஏற்றவும் தடை விதித்தார். நிழற்பந்தல்கள், குடிநீர் மற்றும் கழிப்பிடம் அமைக்க உத்தரவிட்ட ஆட்சியர், வழக்கம்போல் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

Night
Day