துணைவேந்தர்கள் மாநாடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 25, 26-ம் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு நடைபெற உள்ளதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
உதகை ஆளுநர் மாளிகையில் தொடர்ந்து 4வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிப்பார் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டில் உள்ள 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக் கழக துணைவேந்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக் கழக துணை வேந்தர்களை ஒன்றிணைத்து ஒத்துழைப்பை வளர்ப்பதையும், உயர்கல்விக்கான புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதையும் நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடைபெற உள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. 

varient
Night
Day