தஞ்சை: பூண்டி புதுமை மாதா பேராலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு சிலுவை பாதை ஊர்வலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை அருகே பழமை வாய்ந்த பூண்டி புதுமை மாதா பேராலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த காலத்தை கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இதனையொட்டி சிலுவை பாதை ஊர்வலம் புனித மைக்கல் ஆலயத்திலிருந்து தொடங்கியது. ஏராளமான கிறிஸ்தவ மக்கள் இயேசுநாதரின் சிலுவை பாடல்களை ஜெபித்தவாறு ஊர்வலத்தில் பங்கேற்றனர். 

Night
Day