பக்தரை ஒருமையில் பேசிய டி.எஸ்.பி.

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி வயலூர் முருகன் கோயிலிலுக்கு வந்த பக்தரை இழிவுப்படுத்தி ஒருமையில் ஜீயபுரம் டிஎஸ்பி பேசிய காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வயலூர் முருகன் கோயிலில் பக்தரிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அப்போது சாமி கும்மிட வந்த ஒரு பக்தரை  அவரின் குடும்பத்தினர் கண்ணெதிரே காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது. வழக்கமாக திருவிழா நாட்களில் தெற்கு வாசல் வழியாக பக்தர்கள் பால்குடம் எடுத்துச் செல்வார்கள். ஆனால் தெற்கு வாசல் திறக்காதததால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். கோவில் நிர்வாகம் போதிய முன்னேற்பாட்டில் கவனம் செலுத்தவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில் பக்தர் ஒருவர் நேர்த்தி கடனாக மொட்டை அடித்துக் கொண்டு கோயிலுக்குள் வரிசையில் நிற்காமல் முந்தி செல்ல முயன்றார். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் நின்றிருந்த டிஎஸ்பி பழனி என்பவர், பக்தரை அநாகரிகமாக கோவில் என்றும் பாராமல் ஆபாசமாக திட்டினார். மேலும் காலணியால் தாக்குவேன் என பக்தரை பார்த்து தகாத வார்த்தை பேசி டிஎஸ்பி பழனி  விரட்டியடித்த வீடியோ வெளியாகியுள்ளது.

Night
Day