பங்குனி மாத பௌர்ணமியையொட்டி சதுரகிரி மலைக்‍கோவிலில் குவிந்த பக்‍தர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பங்குனி மாத பௌர்ணமியையொட்டி விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பக்‍தர்களின் கூட்டம் அலைமோதியது.

பெளர்ணமியையொட்டி 4 நாட்களுக்‍கு சதுரகிரி மலையேறி சுவாமியை வழிபட பக்‍தர்களுக்‍கு வனத்துறை அனுமதி அளித்தது. இதனையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்‍தர்கள் அதிகஅளவில் வருகை தந்து சுந்தர மகாலிங்க சுவாமியை வழிபட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி மறுக்‍கப்பட்டுள்ளதால், சுவாமி தரிசனம் செய்து முடித்தவுடன் அடிவாரப் பகுதிக்கு இறங்க வேண்டும் எனவும் வனத்துறை அறிவித்துள்ளது.

Night
Day