பழனி முருகன் கோயில் கிரிவலப்பாதையில் மார்ச் 8 முதல் தனியார் வாகனங்களுக்கு தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்களுக்கு வரும் 8-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழனி கிரிவலப்பாதையை ஆக்கிரமித்திருந்த கடைகள் அனைத்தும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி அகற்றப்பட்டன. இந்நிலையில் வரும் 8-ஆம் தேதி முதல் கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும், கோயில் நிர்வாகம் சார்பில் மினி பேருந்து மற்றும் பேட்டரி கார்களை இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் வாகனங்களை சுற்றுலா வாகன நிறுத்தத்தில் நிறுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day