தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு கேரள மாணவர் சங்கத்தினர் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வயநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் சித்தார்த், கடந்த மாதம் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  மாணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கேரள மாணவர் சங்கம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மாணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு கேரள மாணவர் சங்கத்தினர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். தொடர்ந்து தலைமைச் செயலகம் முன்பு அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். 

varient
Night
Day