"காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முடிவு கட்டுப்பட்டு விட்டது" - டி.கே. சிவக்குமார் கருத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகா சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி மீதான தவறான குற்றச்சாட்டுகளுக்கு முடிவு கட்டியுள்ளதாக   துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் கூறியுள்ளார்.
 
ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுடன், கர்நாடகாவில்  ஷிக்கான், சந்தூர் மற்றும் சன்னபட்னா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த துணை முதலமைச்சர் டி கே சிவகுமார், இதன் மூலம் காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாக கூறினார். 2028 தேர்தலுக்கு முன்னோட்டமாக மக்கள் அளித்துள்ள செய்தி இது என்றும், இனி வகுப்புவாத அரசியல் எடுபடாது வளர்ச்சி அரசியல் மட்டுமே என்றும் குறிப்பிட்டார். 

Night
Day