ஏக்நாத் ஷிண்டேவுக்கு அமித் ஷா வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சியை தக்கவைக்க உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர்கள் அஜித் பவார் மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொலைபேசியில் அவர்களைத் தொடர்பு கொண்டு வாழ்த்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தற்போதைய புள்ளிவிபரங்களின்படி, மகாயுதியில், பாஜக  123 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 55 இடங்களிலும், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 38 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். மகா விகாஸ் அகாதியில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 13 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் சிவசேனா உத்தவ் பிரிவு தலா 19 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

Night
Day