ஆபரேசன் சிந்தூரின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட "பாகிஸ்தான் டிரோன்"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆபரேசன்  சிந்தூர் நடவடிக்கையின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோனை முதல் முறையாக இந்திய ராணுவம் காட்சிக்கு வைத்துள்ளது. 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலின் போது பாகிஸ்தான் ராணுவம் ஏவிய டிரோன்களை இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. அப்படி சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் டிரோன் ஒன்றை முதல்முறையாக இந்திய ராணுவம் காட்சிக்கு வைத்துள்ளது. டெல்லியில் உள்ள ராணுவ தளபதியின் இல்லத்தில் இந்த டிரோன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. துருக்கியில் தயாரிக்கப்பட்ட இந்த டிரோனை 10 கிலோ வெடி பொருட்களுடன் லாகூர் விமான நிலையத்தில் இருந்து பஞ்சாப் ஜலந்தர் பகுதியை நோக்கி கடந்த மே 10-ந்தேதி பாகிஸ்தான் ராணுவம் ஏவியது குறிப்பிடத்தக்கது. 


Night
Day