கணவன் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த கொடுமை...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஸ்ரீவைகுண்டம் அருகே கணவனின் கண்முன்னே வெளிமாநில பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் இரண்டு வாரங்களுக்கு முன் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்கு வந்துள்ளனர். நெல்லையில் வசித்து வரும் அசாமை சேர்ந்த முகமது மஹ்புல் ஹுசைன் என்பவர்தான் இந்த தம்பதியை, குவாரி வேலையில் சேர்த்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பளம் போதுமானதாக இல்லாததால் கேரளாவுக்கு செல்ல முடிவெடுத்த அந்த தம்பதியை முகமது ஹுசைன் மிரட்டி, நேரில் பார்த்து பேச வருமாறு அழைத்துள்ளார். அதனை நம்பி சென்ற அசாம் தம்பதியினரை தன்னுடன் அழைத்து வந்த 2 சிறார்களுடன் சிவந்திப்பட்டி காட்டுப் பகுதிக்கு முகமது மஹ்புல் ஹுசைன் அழைத்து சென்றுள்ளார். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து கணவரை தாக்கி, அவரது கண்முன்னே மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணை சாலையோரம் வீசிவிட்டு மூவரும் தப்பியோடியுள்ளனர். 

பாதிக்கப்பட்ட பெண் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்  ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த முகமது மஹ்புல் ஹுசைனும், 2 சிறார்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Night
Day