உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - தீவிர சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 டெல்லியின் வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தில் உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு துறை, நிதி அமைச்சகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்பிற்பகல் மூன்று மணி அளவில் உள்துறை அமைச்சகத்திற்கு மர்ம நபர்கள் இமெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து காவல் துறையினர், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் உள்துறை அமைச்சகத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அண்மையில் டெல்லியில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

varient
Night
Day