பிரேசிலில் கட்டுக்கடங்காமல் பரவும் டெங்கு பாதிப்பு : எண்ணிக்கை 51 லட்சத்தை தாண்டியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரேசிலில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்தை தாண்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேசிலில் இதுவரை இல்லாத அளவுக்கு டெங்கு பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சில அண்டை நாடுகளிலும் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, பிரேசிலில் 51 லட்சத்து 45 ஆயிரத்து 295 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 2 ஆயிரத்து 899 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் மற்றும் டெங்கு வைரசின் பல சுழற்சி போன்ற காரணிகளே டெங்கு காய்ச்சல் அதிகரிப்புக்கு காரணம் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Night
Day