எழுத்தின் அளவு: அ+ அ- அ
எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று மக்களவை கூடியதும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது, தொகுதி மறுவறையறை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
அதேபோல் கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக பாஜக உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை சீர்குலைப்பதாக கூறினார். எனினும் தொடர்ந்து அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், மக்களவையை 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
இதேபோல் மாநிலங்கவையிலும், இட ஒதுக்கீடு குறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் கூறிய கருத்து தொடர்பாக எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதமும் அமளியும் நிகழ்ந்தது. இதனால் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவைத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவையை 2 மணி வரை ஒத்தி வைத்தார்.