கஞ்சா கடத்திய மர்ம கும்பல், காவலர் மீது இருசக்கர வாகனம் மோதி தப்பிச்செல்லும் காட்சிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில், கஞ்சா கடத்தி வந்த மர்ம கும்பல் காவலர் மீது இருசக்கர வாகனத்தை மோதி விட்டு தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

பத்ராசலம் பகுதியில் உள்ள பாலம் வழியாக மர்ம நபர்கள் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், சம்பவ இடத்தில் போலீசார் தடுப்புகளை அமைத்து சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக கஞ்சா கடத்தி வந்த கும்பலை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், கஞ்சா கும்பல் வாகனத்தை நிறுத்தாமல் போலீசார் மீது மோதி விட்டு தப்பி சென்றனர். காயமடைந்த காவலரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, காவலர் மீது வாகனம் மோதி விட்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Night
Day