காரை ஓட்டிச் சென்றவர் பெயர் உமர் அப்துல்லா...

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் மருத்துவர் உமரின் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கார் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் மருத்துவர் உமரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் குண்டுவெடிப்பில் இறந்தாரா அல்லது தலைமறைவாக இருக்கிறாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. டெல்லியில் வெடித்த காரை ஓட்டி வந்தது மருத்துவர் உமர் என்ற பயங்கரவாதி எனவும், ஹரியானாவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு கைதான மருத்துவர் ஷகீரின் கூட்டாளி என கூறப்படுகிறது.

மேலும், கார் வெடிப்புக்கு அமோனியம் நைட்ரேட் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 3 மணி நேரம் பார்க்கிங்கில் நின்றிருந்த கார் மாலை 6.48 மணிக்கு மெதுவாக இயக்கப்பட்டு சிக்னல் அருகே வந்த பிறகு வெடித்துள்ளது. இதனிடையே, உமரின் தாய், சகோதரியை காஷ்மீரில் வைத்து போலீசார் கைது செய்தனர். டெல்லி கார் குண்டுவெடிப்பு தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Night
Day