எழுத்தின் அளவு: அ+ அ- அ
மும்முனை போட்டி நிலவிய ஜம்முகாஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.
கந்தர்பால் மற்றும் பட்காம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்ரீகுப்வரா- பிஜ்பெஹாரா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் போட்டியிட்ட பஷீர் அகமது ஷாவேரி 33 ஆயிரத்து 299 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிடிஐ கட்சி சார்பில் போட்டியிட்ட இல்திஜா முஃப்தி 23 ஆயிரத்து 529 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
நவ்ஷேரா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் போட்டியிட்ட சுரேந்திரகுமார் சவுத்ரி 35 ஆயிரத்து 69 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா 7ஆயிரத்து 819 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
மத்திய ஷால்டேங் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா 18 ஆயிரத்து 933 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜாவீத் உசேன் பெய்க், 22 ஆயிரத்து 523 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
சோபோர் தொகுதியில் தேசியமாநாட்டு கட்சி சார்பில் போட்டியிட்ட இர்சாத் ரசூல்கர் 26 ஆயிரத்து 975 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
சன்னபோரா தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளர் முஸ்தாக் குரு 13ஆயிரத்து 717வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.