நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் பாஜக எம்பி-க்கள் கடும் அமளி - இரு அவைகளும் முடங்கியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக எம்பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டால் இரு அவைகளும் முடங்கியது.

வாக்கு திருட்டு தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் நேற்று பேரணி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய முழக்கங்ள எழுப்பப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் மக்களவை இன்று கூடிய போது இந்த விவகாரத்தை எழுப்பி பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதேபோல் மாநிலங்களவையிலும் இந்த விவகாரத்தை எழுப்பிய மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக எழுப்பப்பட்ட கோஷங்களுக்காக சோனியா காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காங்கிரஸ் பேரணியில், பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது காங்கிரஸ் கட்சியின் சிந்தனை மற்றும் மனநிலையைக் காட்டுகிறது என்றும் ஒரு பிரதமருக்கு எதிராக இதுபோன்ற விஷயங்களைப் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளி காரணமாக மாநிலங்களவையும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.


Night
Day