புதுச்சேரியில் குடும்ப தலைவிக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

புதுச்சேரி 15வது சட்டபேரவையின் 6வது கூட்டத்தொடர் கடந்த திங்களன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 2025-2026ம் ஆண்டிற்கான 13 ஆயிரத்து 600 கோடிக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். அதன்படி,  அனைத்து விவசாயிகளுக்கும் மழைக்கால நிவாரணமாக ஆண்டு தோறும் 2 ஆயிரம் வழங்கப்படும், பள்ளி மாணவர்களுக்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் சத்துணவுடன் முட்டை வழங்கப்படும், குடும்ப தலைவிக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் 

varient
Night
Day