''ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா பங்கேற்காது'' - அமெரிக்க அதிபர் பைடன் திட்டவட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் முடிவு செய்தால், ஈரானுக்கு எதிரான எதிர் தாக்குதலில் பங்கேற்க முடியாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை தெரிவித்து விட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரி கூறியுள்ளார்.  
இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்றும் ஆனால் போரை  விரும்பவில்லை என்று வெள்ளை மாளிகையின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பியும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Night
Day