அமெரிக்காவுக்கு கூடுதலாக வரி விதித்தால், இந்தியாவுக்கு அதே அளவு வரி விதிக்கப்படும் - டிரம்ப் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா தங்களுக்கு விதிக்கும் அதே அளவு வரியை, அவர்களுக்கும் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். 


புளோரிடாவின் மார்-ஏ-லாகோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது சீனாவுடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். சில அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும், பிரேசிலும் இருப்பதாக டிரம்ப் கூறினார். இந்த உலகில் பரஸ்பரம் என்பது மிக முக்கியமான விஷயம் என்று கூறிய டிரம்ப், அவர்கள் தங்களுக்கு கூடுதலாக வரி விதித்தால் அதே அளவு வரி அவர்களுக்கும் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்தியா 100 சதவீதம் வரி விதித்தால், அதே வரி அவர்களுக்கும் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்தார்.


Night
Day