அமித்ஷாவைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.     

மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற அரசியல் சாசனம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது rட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரை அவர் அவமதித்து விட்டதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் அமித்ஷாவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க் கட்சி எம்பிக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க் கட்சி எம்பிக்கள், அம்பேத்கரின் படத்தை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.



varient
Night
Day