தென்கொரிய நாடாளுமன்றத் தேர்தல்- எதிர்கட்சி அமோக வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென் கொரியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதான எதிர்க்‍கட்சியான ஜனநாயகக்‍கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் நிலையில் உள்ளது. 

தென்கொரியாவில் தற்போது மக்‍கள் அதிகார கட்சி ஆட்சியில் உள்ளது. தென்கொரிய அதிபராக உள்ள யூன் சுக்‍ யோல் பதவி காலம் இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. அதிபரின் கட்சியான மக்‍கள் அதிகார கட்சி இந்த தேர்தலில் மக்‍கள் செல்வாக்‍கை இழந்துள்ளது. புதனன்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் மொத்தம் உள்ள 254 இடங்களில் 161 இடங்களில் ஜனநாயகக்‍கட்சி வெற்றி பெற்றுள்ளது. விகிதாசார பிரதிநிதித்துவத்தின் படி மொத்தம் 175 இடங்களில் எதிர்க்‍கட்சியினர் வெற்றி பெற்றுள்ளன. மக்‍கள் அதிகார கட்சி 108 இடங்களை பெற்றுள்ளது. விலைவாசி உயர்வு, முதியோர் மக்‍கள் தொகை அதிகரிப்பு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகளை சமாளிக்‍க இயலாமல் மக்‍கள் அதிகார கட்சி தோல்வியடைந்துள்ளது. 

varient
Night
Day