நாங்கள் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தைத்தான் ஆதரிக்கிறோம், போரை அல்ல - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாங்கள் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தைத்தான் ஆதரிக்கிறோம், போரை அல்ல என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் உரையாற்றிய அவர், காலநிலை மாற்றம், பயங்கரவாதம் போன்ற பிற அச்சுறுத்தல்களுடன் பணவீக்கத்தைத் தடுப்பது, உணவு, எரிசக்தி, சுகாதாரம் மற்றும் நீர் பாதுகாப்பை உறுதி செய்வது, உலகின் அனைத்து நாடுகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் விஷயங்களாக உள்ளதாக தெரிவித்தார்.மேலும், சைபர் மோசடி போன்ற புதிய சவால்கள் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார். இத்தகைய நேரத்தில், பிரிக்ஸ் அமைப்பின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளதாக கூறிய அவர், நமது அணுகுமுறை மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Night
Day