ரஷ்யாவுக்கு இராணுவ உபகரணங்களை வடகொரியா அனுப்பியுள்ளது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்ரைன் போரில் உதவுவதற்காக வெடிமருந்துகள் மற்றும் ராணுவ உபகரணங்களை உள்ளடக்கிய 7 ஆயிரம் கன்டெய்னர் லாரிகளை ரஷ்யாவுக்கு வடகொரியா அனுப்பியிருப்பதாக தென்கொரிய ராணுவ அமைச்சர் ஷின் வோன்-சிக் குற்றம்சாட்டியுள்ளார். ஆரம்பத்தில் கப்பல்கள் மூலம் ஆயுதப் பொருட்களை ரஷ்யாவுக்கு அனுப்பிய வடகொரியா, பின்னர் ரயில் பாதைகள் மூலம் தங்கள் நில எல்லை வழியாக அதிக அளவில் அனுப்பியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். பல மில்லியன் எண்ணிக்கையிலான பீரங்கி குண்டுகள் மற்றும் பிற ராணுவ உபகரணங்களை அனுப்புவதற்கு ஈடாக, ரஷியாவிடம் இருந்து வட கொரியா உதவிப்பொருட்களை பெற்றுள்ளதாக கூறினார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடைகளை மீறி, வட கொரியாவுக்கு ரஷ்யா எரிபொருளை வழங்கியிருக்கலாம் எனவும் ஷின் வோன்-சிக் சந்தேகம் எழுப்பினார்.

Night
Day