அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரூ.3.29 கோடி பறிமுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் காட்டப்படாத 3 கோடியே 29 லட்சத்து 9 ஆயிரத்து 850 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதற்காக பல கோடி ரூபாய் பணம் பதுக்கிவைத்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், தமிழகத்தில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருச்சி ஏ-புதூர் பகுதியில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தியின் வீடு மற்றும் அவரது பினாமி வீட்டில் கடந்த 3 நாட்களாக வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

இதேபோல் திருச்சி கேகே நகர் பகுதிக்குட்பட்ட தென்றல் நகர் பகுதியில் உள்ள பெரியதம்பி, தியாகராஜா, ரவி ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் இன்ஃப்ரா நெட் சென்டர் நிறுவனத்திலும் வருமானவரித் துறையினர் சோதனை செய்தனர்.

கடந்த 3 நாட்களாக நடத்திய இந்த சோதனையின் முடிவில், கணக்கில் காட்டப்படாத 3 கோடியே 29 லட்சத்து 9 ஆயிரத்து 850 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக  தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான  பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். 

Night
Day