அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டத்தில் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


கோத்தகிரி அருகே உள்ள ஓரசோலை பகுதியை சேர்ந்த மனோ அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏராளமானோரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து, பணியில் சேர்வதற்கான நியமன ஆணைகளையும் வழங்கி உள்ளார். அந்த நியமன ஆணையுடன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்றபோது அது போலி என தெரிய வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட சிலர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மோசடி குறித்து புகார் மனு அளித்ததன் பேரில், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, குற்றப்பிரிவு போலீசார் மனோவை கைது செய்து விசாரித்ததில் அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.

Night
Day