சென்னை கோட்டூர்புரம் இரட்டை கொலை வழக்கில் சுக்கு காபி சுரேஷ் உள்ளிட்ட 12 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கோட்டூர்புரத்தில் ரவுடி படப்பை சுரேஷ், அருண் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 12 பேர் கொண்ட ரவுடி கும்பல் சேலத்தில் கைது செய்யப்பட்டது.

சென்னை கோட்டூர்புரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள நாகவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி படப்பை சுரேஷ் மற்றும் கோட்டூர்புரத்தை சேர்ந்த அருண் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். முன்விரோதம் காரணமாக நடைபெற்ற இந்த இரட்டைக் கொலையில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ரவுடி சுக்கு காபி சுரேஷ் உள்ளிட்ட 12 பேரை கோட்டூர்புரம் போலீசார் தேடி வந்தனர். 

3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்திவந்த நிலையில், கொலை சம்பவத்தை அரங்கேற்றியவர்கள் கார் மூலம் சேலம் தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. செல்போன் சிக்னல்கள் மூலம் அவர்கள் சேலத்தில் மறைந்திருந்ததை கண்டுபிடித்த தனிப்படை போலீசார், சேலம் புறநகர் பகுதியில் வைத்து சுக்கு காபி சுரேஷ் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர். கைது செய்தவர்களை தாம்பரத்தில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day