டிஜிபி அலுவலகம் முன்பு ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிக ஆதரவாளர் தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டிஜிபி அலுவலகம் முன்பு புரட்சித் தமிழகம் அமைப்பின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடுதுறை பேரூராட்சி தலைவரும், பாமக வடக்கு மாவட்ட செயலாளருமான ம க ஸ்டாலின் மீது மர்ம நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பாமகவினர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர். இந்தநிலையில், அவர்களுடன் டிஜிபியை சந்திக்க ஏர்போர்ட் மூர்த்தியும் வந்தார். அப்போது அவர் டிஜிபி அலுவலகம் முன்பு சாலையில் நின்று கொண்டிருந்த போது, திருமாவளவனை பற்றி தவறாக பேசியதாக கூறி, அவரின் ஆதரவாளர்கள் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்திவிட்டு, தப்பிச் சென்றனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஏர்போர்ட் மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கடுமையாக விமர்சித்தார். 

varient
Night
Day